×

சரத்குமாரும், ராதிகாவும் ₹15 கோடி ஜிஎஸ்டி பாக்கி: பாஜ வேட்பாளருக்கு மட்டும் சுதந்திரமா? மாணிக்கம் தாகூர் கேள்வி

விருதுநகர்: விருதுநகர் பாஜ வேட்பாளர் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகியோர் ₹15 கோடி ஜிஎஸ்டி கட்டாமல் நிலுவை வைத்து உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் மீது குற்றம் சாட்டி உள்ளார். ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த படிவம் 26ல் வருமான வரி, ஜிஎஸ்டி வரி என ₹6 கோடியே 54 லட்சமும், அதேபோல் ராதிகாவின் கணவர் சரத்குமார் ₹8 கோடியே 48 லட்சம் வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில், ‘மோடியின் ஜிஎஸ்டி. பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் வரியை செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார். அதே நேரத்தில் குறு, சிறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தொழில் செய்து வருகின்றனர். வரி நடைமுறைகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக சமத்துவமாக அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது. இந்தியா கூட்டணி ஆட்சி மாற்றும்’’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் பாஜ அலுவலகத்தில் பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மார்ச் 31க்கு முன்பாக படிவம் 26 தாக்கல் செய்தோம். வரி நிலுவையை மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் கட்டுவோம். வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது இல்லை’ என்றார்.

The post சரத்குமாரும், ராதிகாவும் ₹15 கோடி ஜிஎஸ்டி பாக்கி: பாஜ வேட்பாளருக்கு மட்டும் சுதந்திரமா? மாணிக்கம் தாகூர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,Radhika ,BJP ,Manikma Tagore ,Virudhunagar ,Congress ,Manikam Tagore ,Manickam Tagore ,Dinakaran ,
× RELATED நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து...